ஹோம் /நியூஸ் /வணிகம் /

அட்சய திரிதியை அன்று ரூ.15,000 கோடிக்கு தங்கம் விற்பனை!

அட்சய திரிதியை அன்று ரூ.15,000 கோடிக்கு தங்கம் விற்பனை!

அட்சய திரிதி

அட்சய திரிதி

தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளியும் அதிகமாக விற்பனையானது. சிறிய நகைக்கடை முதலாளிகள் முதல் பெருநிறுவனங்கள் வரை தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையால் அட்சய திரிதியை அன்று பலன் அடைந்தது.

கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலான பண்டிகைகள் மற்றும் விசேஷங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தான் கொண்டாடப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட ஊரடங்கு தளர்வுகள் முழுவதுமாக நீக்கப்பட்ட நிலையில், இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியுள்ளது. மக்களும் பல்வேறு விசேஷங்களை தங்களால் இயன்ற அளவு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். அதில் ஒன்றுதான் அட்சய திருதியை.

அட்சய திருதியை என்பது ஒரு சுபமுகூர்த்த தினமாகும் மற்றும் எந்த செயலையும் தொடங்குவதற்கு மிகவும் நல்ல நாள். இந்த நாளில் தங்கம் வாங்கினால் அள்ள அள்ள குறையாது என்பது போல வீட்டில் செல்வம் செழித்து, மேலும் மேலும் தங்கம் வாங்க முடியும் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது. நம் நாட்டைப் பொறுத்தவரை தங்கம் என்பது உணர்வுகள், உரிமை மற்றும் அந்தஸ்து சார்ந்தது. சமீபத்தில் தான் தங்கம் முதலீடாகப் பார்க்கப் படுகிறது.

PF balance check : மொத்தம் 4 வழி இருக்கு.. பிஎஃப் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்குன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!

சில வருடங்களாகத்தான் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பது அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நகைக்கடைகள் கிட்டத்தட்ட மூடி இருந்த நிலையில், இந்த ஆண்டு எதிர்பாராத அளவுக்கு நகைகள் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு அட்சய திருதியைக்கு இந்தியாவில் கிட்டத்தட்ட 15,000 கோடி ரூபாய்க்கு நகைகள் விற்பனை ஆகியுள்ளன என்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், 500 கோடி ரூபாய்க்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்திந்திய நகைக்கடை மற்றும் பொற்கொல்லர் கூட்டமைப்பு பிரெசிடன்ட், சிஏஐடியின் தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் மற்றும் பங்கஜ் அரோரா ஆகியோர் "கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் நெருக்கடியால் மிகப்பெரிய நெருக்கடிக்கு பிறகு, தங்கத்திற்கான சந்தை மீண்டும் நாடு முழுவதும் உயிர்பெற்றது. அட்சய திரிதியை அன்று, 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான நகை வியாபாரம் நடந்து, தங்க வணிகர்கள் மற்றும் வியாபாரிகள், நகைக்கடை முதலாளிகள் என்று தங்கச் சந்தையில் ஈடுபட்டுள்ள அனைவரின் முகத்திலும் புன்னகையை பார்க்க முடிந்தது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியாக, பல நகைக்கடைக்காரர்களும் லைட்-வெயிட் நகைகளை தயாரித்தனர். இந்த வகை நகைகளுக்கும் நல்ல டிமான்ட் இருந்தது" என்று தெரிவித்தனர்.

ஹோம் லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு... EMI தொகை அதிகமாக இருந்தால் இதை செய்யுங்கள்!

தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளியும் அதிகமாக விற்பனையானது. சிறிய நகைக்கடை முதலாளிகள் முதல் பெருநிறுவனங்கள் வரை தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையால் அட்சய திரிதியை அன்று பலன் அடைந்தனர்

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2019 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.3,270 என்று இருந்தது. அதே போல, வெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 38,350 என்று இருந்தது. இந்த ஆண்டு, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,300 மற்றும் ஒரு கிலோ வெள்ளியில் விலை ரூ.66,600 ஆகும். மூன்று ஆண்டுகளில் கணிசமாக தங்கம் விற்பனை ஆகவில்லை என்றாலும் கூட, விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Akshaya Tritiya, Gold Price