Gold Rate | தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ352 உயர்வு!

Gold Rate | தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ352 உயர்வு!

தங்கம் விலை

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில்  இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.8 விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4857 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை ரூ. 4,856 ஆக இருந்தது. இந்நிலையில் வாரத்தின் மூன்றாது நாளான இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,848-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 8 உயர்ந்து ரூ. 38,856-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4857 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 74.50 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.0.20 விலை குறைந்து ரூ. 74.30 விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே  தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாள் முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக விலை உயர்ந்துள்ளதுள்ளது.

    Also read... Whatsapp Bankஐ தொடங்கியது Bank of Baroda - வீட்டிலேயே கிடைக்கும் வங்கிச்சேவை!

    நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்த நிலையில்  இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.8 விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில்,  இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்துவிலை அதிகரித்தலால் இன்று தங்கம் விலை ரூ.38.856-க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: