முகப்பு /செய்தி /வணிகம் / Gold Rate: ஏறிக்கொண்டே இருக்கும் தங்கம் விலை... இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

Gold Rate: ஏறிக்கொண்டே இருக்கும் தங்கம் விலை... இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate: நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 304 விலை உயர்ந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான  திங்கள் முதல் விலை ஏற்றத்துடனே தொடங்கிய நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4767 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 38 உயர்ந்துள்ளது.

அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,136-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 304 உயர்ந்து ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4805 விற்பனை செய்யப்படுகின்றது.

தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி வெள்ளியின் விலை ரூ. 61.20-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ. 1.10 உயார்ந்து ரூ. 62.30 விற்பனை செய்யப்படுகின்றது.

Also read... வருமான வரி செலுத்தும் போது ரூ. 10,000 வரிவிலக்கு வேண்டுமா? அப்ப இதை செய்யுங்கள்!

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 304 விலை உயர்ந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Gold, Gold Price, Gold rate