• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Gold Rate | ரூ.36,000-க்கு கீழ் சென்ற தங்கம் விலை.. கடந்த 2 நாட்களில் 1000 ரூபாய் வரை குறைந்தது..

Gold Rate | ரூ.36,000-க்கு கீழ் சென்ற தங்கம் விலை.. கடந்த 2 நாட்களில் 1000 ரூபாய் வரை குறைந்தது..

தங்கம்

தங்கம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் விலை குறைந்து 35976 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

  • Share this:
    ஒரு கிராம் தங்கம் 32 ரூபாய் குறைந்து 4,497 ரூபாயாக உள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 72 ரூபாய் 20 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து 72 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கம் விலை குறைந்து வருகிறது. 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்தது. இதனால் தங்கம் சவரனுக்கு ரூ.36,000க்கு கீழ் வந்துள்ளது.

    சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து ரூ.35 976-க்கு விற்பனையாகிறது.  கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4,477 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.72,200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72-க்கு விற்கிறது.

    மேலும் படிக்க...அஜித்திடமே ‘வலிமை’ அப்டேட் கேட்டு பதில் வாங்கிய ரசிகர்

    கடந்த 1-ந்தேதி தங்கம் சவரனுக்கு ரூ.37,000க்கு விற்றது. இன்று வரை சவரனுக்கு  ரூ.1,024 குறைந்துள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: