Gold Rate | சற்று குறைந்தது தங்கத்தின் விலை... உயர்ந்தது வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | சற்று குறைந்தது தங்கத்தின் விலை... உயர்ந்தது வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம்

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 104 விலை குறைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4805 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 13 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,440-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 104  குறைந்து ரூ. 38,336-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4792 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 74.20 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 0.30 உயர்ந்து, ரூ. 74.50 விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே  தொடர்ந்து மூன்று நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் நேற்றும் இன்றும் ஏற்ற குறைந்து காணப்படுகின்றது.

    Also read... பிட்காயினா அல்லது தங்கமா? முதலீடு செய்ய எது சிறந்தது...!

    நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 104 விலை குறைந்துள்ளது.

    கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில்,  இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தும் விலை  ஏற்றத்துடனே தொடர்ந்து மூன்று நாட்களாக இருந்தது. இந்நிலையில் நேற்றும் இன்றும் விலை குறைந்த நிலையில் இன்று  சவரன் ரூ.38,336-க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: