Gold Rate | சவரனுக்கு 38 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹ 40 ரூபாய் குறைந்த‌ நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 160 உயர்ந்தது.

Gold Rate | சவரனுக்கு 38 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
தங்கம்
  • News18
  • Last Updated: November 21, 2020, 11:10 AM IST
  • Share this:
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4740 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹20 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி  ₹37,920-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ₹ 160 உயர்ந்து ₹38,080-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ₹ 4760 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 66.80 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.10 குறைந்து  ₹ 66.70 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த திங்கள் அன்று உயந்தது. அதனை தொடர்ந்து மூன்று நாட்களாக‌ தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக விலை உயர்ந்துள்ளது.

Also read... கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் ஒரு கோடி ரூபாய் வென்ற ஐபிஎஸ் மோகிதா சர்மா - அசத்தல் ட்வீட்!


இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹ 40 ரூபாய் குறைந்த‌ நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 160 உயர்ந்தது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக வீழ்ச்சியில் இருந்த தங்கம் விலை இன்று இரண்டாவது நாளாக‌ உயர்ந்து சவரன்  ₹38,080-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து குறைந்து வந்த தங்க்கத்தின் விலை சற்று உயர்ந்ததால் இன்னும் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது கூடுமா என்ற குழப்பத்தில் ‌பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading