Gold Rate | ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.776 உயர்வு!

Gold Rate | ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.776 உயர்வு!

தங்கம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 776 உயந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4733 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4636 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 97 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,088-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 776 உயர்ந்து ரூ. 37,864-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4733 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 66.60 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ2.90 உயர்ந்து, ரூ. 69.50 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கியது.  இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 776 உயந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 13 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

Also read... தமிழ்நாட்டில் ரூ.7,000 கோடி செலவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி ஆலையை தொடங்கும் டாடா சன்ஸ்!



கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில். இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்று சற்று உயர்ந்தது. அதனை தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.37,864-க்கு விற்பனையாகிறது.

இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: