Gold Rate | ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ. 320 உயர்வு!

Gold Rate | ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ. 320 உயர்வு!

தங்கம் விலை

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 320 விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4691 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4651 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,208-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 320  உயர்ந்து ரூ. 37,528-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4691விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 71.30 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 1.20 உயர்ந்து ரூ. 72.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கல் காலை குறைவுடன் தொடங்கிய நிலையில் அதனை தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே வருகின்றது.

    Also read... எஃப்.டிகளுக்கு அதிக அளவிலான வட்டி விகிதங்கள் வழங்கும் வங்கிகள் விவரம்!

    நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 320 விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் சவரன் விலை 37,000 குறைவாக விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இந்த வாரத்தின் தொடர்ந்து விலை உயர்ந்து இன்று சவரன் ரூ.37,528-க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: