சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4684 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4708 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 24 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,664-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 192 குறைந்து ரூ. 37,472-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4684 விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 68.80 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 0.80 குறைந்து, ரூ. 68.00 விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ. 192 குறைந்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்த நிலையில், இன்று மீண்டும் ரூ. 192 விலை குறைந்துள்ளது.
கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து இன்று தங்கம் விலை சற்று குறைந்து சவரன் ரூ.37,472-க்கு விற்பனையாகிறது.
இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.