Gold Rate | ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் உயர்வு

தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 37,048 ரூபாயாக விற்பனையாகிறது.

  • Share this:
    தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

    இந்தநிலையில் இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து 37,048 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 13 ரூபாய் உயர்ந்து 4,631 ரூபாயாக உள்ளது. அதே போலவே வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் 40 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 40 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் உயர்ந்து 73 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    மேலும் படிக்க... ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’.. தேர்தல் பிரசாரம் இன்று தொடக்கம்


    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: