Gold Rate | தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை ரூ. 24 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 24 விலை குறைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4677 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4680 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,440-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 24  குறைந்து ரூ. 37,416-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4677 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் நேற்று மாலை நிலவரப்படி ரூ. 70.40 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 0.30 உயர்ந்து, ரூ. 70.70 விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்றும் சற்று விலை குறைந்துள்ளது.

    Also read... தியேட்டரில் பொறி பறக்கும்... ஈஸ்வரன் படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் பேச்சு!

    நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை ரூ. 24 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 24 விலை குறைந்துள்ளது.

    கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வந்த நிலையில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் விலை குறைந்தது.  இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்றும் இன்றும் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று  சவரன் ரூ.37,416-க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: