Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4622க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.36,976க்கு விற்பனையாகிறது.

  • Share this:
    தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.

    இந்தநிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4622க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.36976க்கு விற்பனையாகிறது.

    மேலும் படிக்க... உங்கள் தொகுதி: பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

    இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 40048 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை 10 பைசா உயர்ந்து 70.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: