HOME»NEWS»BUSINESS»gold rate today rs 37152 gold price in chennai gold silver price in tamil nadu on 20 january 2021 1 vin

Gold Rate | தொடர் விலை உயர்வில் தங்கம் மற்றும் வெள்ளி... இன்றைய நிலவரம் என்ன?

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 96 விலை உயர்ந்துள்ளது.

Gold Rate | தொடர் விலை உயர்வில் தங்கம் மற்றும் வெள்ளி... இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை
  • News18
  • Last Updated :
  • Share this:

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4644 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4632 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 12 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,056-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 96  உயர்ந்து ரூ. 37,152-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4644 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 70.70 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 0.50 உயர்ந்து ரூ. 71.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கல் காலை குறைவுடன் தொடங்கிய நிலையில் அதனை தொடர்ந்து மூன்று நாட்களாக விலை உயர்ந்துள்ளது.

Also read... பிளிப்கார்ட், அமேசானின் சலுகை விற்பனை - ஸ்மார்ட்போன்களுக்கு எண்ணற்ற ஆபர்கள்!

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 96 விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் சவரன் விலை 37,000 குறைவாக விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இந்த வாரத்தின் தொடர்ந்து விலை உயர்ந்து இன்று சவரன் ரூ.37,152-க்கு விற்பனையாகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: