Gold Rate : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம்

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 184 குறைந்த நிலையில் நிலையில் இன்று ஒரே நாளில்  ரூ. 136 விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4639 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4622 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,976-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 136 உயர்ந்து ரூ. 37,112-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4639 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 66.80 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 0.40 உயர்ந்து, ரூ. 67.20 விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து குறைந்தது. இதனை தொடர்ந்து இன்று மீண்டு தங்கத்தில் விலை உயர்ந்துள்ளது.

    நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 184 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில்  ரூ. 136 விலை உயர்ந்துள்ளது.

    Also read... பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து முன்பதிவு இன்று முதல் துவக்கம்...!



    கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இந்த வாரமும் விலை ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயார்ந்து சவரன் ரூ.37,112-க்கு விற்பனையாகிறது.

    இந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டதால், மேலும் வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா அல்லது கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
    Published by:Vinothini Aandisamy
    First published: