Gold Rate | உயர்ந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | உயர்ந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

கோப்புப் படம்

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 88 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 72 விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4622 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4613 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 9 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,904-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 72  உயர்ந்து ரூ. 36,976-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4622 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 70.00 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 0.60 உயர்ந்து ரூ. 70.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்று காலை குறைவுடன் தொடங்கிய நிலையில் நேற்று மாலையும், இன்று காலையும் சற்று உயர்ந்துள்ளது.

    Also read... மத்திய அரசின் 2021 பட்ஜெட் - ரியல் எஸ்டேட் துறையின் கோரிக்கை!

    நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 88 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 72 விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் சவரன் விலை 37,000 குறைவாக விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று  சற்று விலை உயர்ந்து சவரன் ரூ.36,904-க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: