சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4595 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4625 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 240 குறைந்து ரூ. 36,760-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4595 விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 79.20 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 2.40 விலை குறைந்து ரூ. 76.40 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான நேற்றும் இன்றும் குறைவுடன் தொடங்கியுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 296 குறைந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 240 விலை குறைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இன்றும் தொடர்ந்து தங்கத்தில் விலை குறைந்து வந்ததால் சவரன் விலை 37,000 குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று சவரன் ரூ.36,760-க்கு விற்பனையாகிறது.