Gold Rate: சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹ 104 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 120 குறைந்தது.

தங்கம்
- News18
- Last Updated: November 28, 2020, 11:10 AM IST
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4574 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4589 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹ 15 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ₹36,712-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ₹ 120 குறைந்து ₹36,592-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ₹ 4574 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 64.70 விற்பனை ஆன நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் தொடர்ந்து வாரத்தின் கடைசி நாளானா இன்றும் காலை நிலவரப்படி விலை குறைந்துள்ளது. Also read... டட்சன் கார்களுக்கு அதிரடி ஆபர்கள் - ரூ. 45,000 வரை தள்ளுபடி அறிவிப்பு!
இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹ 104 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 120 குறைந்தது.
கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்த சூழலில் இந்த வாரத்தின் கடைசி நாளில் தங்கம் விலை குறைந்ததால் சவரன் ₹36,592-க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 64.70 விற்பனை ஆன நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் தொடர்ந்து வாரத்தின் கடைசி நாளானா இன்றும் காலை நிலவரப்படி விலை குறைந்துள்ளது.