முகப்பு /செய்தி /வணிகம் / Gold Rate | சவரனுக்கு ₹384‌ உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | சவரனுக்கு ₹384‌ உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

தங்கம்

தங்கம்

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இந்த வாரம் சற்று உயர்ந்து இன்று சவரன் ₹36,592-க்கு விற்பனையாகிறது.

  • Last Updated :

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4574 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4526 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹48 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி  ₹ 36,208-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ₹384 உயர்ந்து ₹36,592-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில்  ₹ 4574 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 64.80 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 1.60 உயர்ந்து  ₹ 66.40 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாக விலை ஏற்ற இறக்கத்துடனே விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 384 உயந்துள்ளது.

Also read... ஹெல்மெட்டிற்கு BIS சான்றிதழ், ISI மார்க்கை கட்டாயமாக்கியது மத்திய அரசு...!

இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹ 48 குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

top videos

    கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இந்த வாரம் சற்று உயர்ந்து இன்று சவரன் ₹36,592-க்கு விற்பனையாகிறது. இதனால் வரும் நாட்களில் விலை குறையுமா அல்லது மேலும் கூடுமா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் தங்கம் வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.

    First published:

    Tags: Gold Price, Gold rate