Home /News /business /

Gold Rate | வாரத்தின் முதல் நாள் சரிவுடன் தொடங்கியது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | வாரத்தின் முதல் நாள் சரிவுடன் தொடங்கியது தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம்

தங்கம்

கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை மாலை நிலவரப்படி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை ஆன நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 88 விலை குறைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4458 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சனி கிழமை மாலை இதன் விலை ரூ. 4469 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 11 குறைந்துள்ளது. அதேபோல, சனி கிழமை மாலை நிலவரப்படி ரூ. 35,752-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 88  குறைந்து ரூ. 35,664-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4458 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி சனி கிழமை மாலை நிலவரப்படி ரூ. 73.40 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.30 விலை குறைந்து ரூ. 73.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று சரிவுடனே தொடங்கியுள்ளது.

    Also read... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.5% ஆக உயரும்: பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்புகள்!

    கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை மாலை நிலவரப்படி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை ஆன நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 88 விலை குறைந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் தொடர்ந்து தங்கத்தில் விலை குறைந்து வந்ததால் சவரன் விலை 36,000 குறைவாக விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்த நிலையில்  சவரன் ரூ.35,664-க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Gold Price, Gold rate

    அடுத்த செய்தி