Gold Rate | மீண்டும் 35,000 ரூபாயைத் தாண்டிய தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | மீண்டும் 35,000 ரூபாயைத் தாண்டிய தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

தங்க நகைகள்

சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,378 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,374 ரூபாயாக இருந்தது.

  • Share this:
    தங்கத்தின் விலை ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் விலை உயர்வு இல்லாத நிலையில் நகை வாங்குவோர் பெருமூச்சு விட்டனர். இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று மீண்டும் விலையேற்றம் தொடங்கி அதிர்ச்சியளித்துள்ளது.

    இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,378 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,374 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, நேற்று 34,992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 32 ரூபாய் உயர்ந்து 35,024 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    மேலும் படிக்க... மதுரை, திருச்சியில் மக்களை மகிழ்வித்த கோடை மழை...

    வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.71.70 ஆக இருந்தது. இன்றும் அதே விலையில்தான் விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 71,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: