Gold Rate | மீண்டும் 35,0000 ரூபாயைத் தொட்டது ஒரு சவரன் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | மீண்டும் 35,0000 ரூபாயைத் தொட்டது ஒரு சவரன் தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து மீண்டும் 35,000 ரூபாயை தொட்டுள்ளது.

  • Share this:
    சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து மீண்டும் 35,000 ரூபாயை தொட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் 35,008 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 28 ரூபாய் அதிகரித்து 4,376 ரூபாயாக உள்ளது.

    நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 296 குறைந்து ரூ 34,784-க்கும் ஒரு கிராம் ரூ. 4,348-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் ஒரு சவரன் மீண்டும் 35,000 ரூபாய் தாண்டியது. வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 80 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு 400 ரூபாய் அதிகரித்து 73,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் படிக்க... Petrol-Diesel Price | அதிரடியாக உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம்?

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்களில் இருந்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: