Gold Rate | மீண்டும் ரூ. 34 ஆயிரத்தை தொட்டது தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | மீண்டும் ரூ. 34 ஆயிரத்தை தொட்டது தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 16 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 168 விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4258 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4237ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 168 உயர்ந்த்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 33,896-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 168 உயர்ந்து ரூ. 34,064-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4258 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 71.60 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.90 விலை அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது.

Also read... தங்க நகைக்கடன்களுக்கு மிகக் குறைந்த வட்டியை வசூலிக்கும் ஐந்து வங்கிகள்!

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 16 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 168 விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து தங்கத்தில் விலை குறைந்து வந்ததால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை 34,000 குறைவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது விலை உயர்ந்து 34,000 கடந்துள்ளது.  இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்து சவரன் ரூ.34,064-க்கு விற்பனையாகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: