Gold Rate | சவரனுக்கு ரூ. 128 உயர்ந்தது தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்க நகைகள்

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 304 குறைந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 128 விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4228 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4212ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 16 உயர்ந்த்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 33,696-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 128 உயர்ந்து ரூ. 33,824-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4228 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 70.00 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.40 விலை அதிகரித்து ரூ.70.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது.

    Also read... குறைந்த வட்டியில் கல்விக்கடன்... எந்த வங்கி பெஸ்ட் - முழு விவரம்!

    நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 304 குறைந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 128 விலை உயர்ந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து தங்கத்தில் விலை குறைந்து வந்ததால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை 34,000 குறைவாக விற்பனை செய்யப்பட்டது. தற்போதும் தங்கத்தின் விலை குறைந்து சவரன் ரூ.33,824-க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: