Gold Rate | தொடர்ந்து குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | தொடர்ந்து குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்க நகைகள்

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 224 குறைந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 80 விலை குறைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4183 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4193ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்த்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 33,544-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 80 குறைந்து ரூ. 33,464-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4183 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 70.40 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.20 விலை குறைந்து ரூ.70.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்களில் இருந்து தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

    Also read... தங்க நகைக்கடன்களுக்கு மிகக் குறைந்த வட்டியை வசூலிக்கும் ஐந்து வங்கிகள்!

    நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 224 குறைந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 80 விலை குறைந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து தங்கத்தில் விலை குறைந்து வருவதால் சவரன் விலை 34,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும் சவரன் ரூ.33,464க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: