Gold Rate | தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.33,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.33,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தங்கத்தின் விலை சவரன் ரூ.35,312க்கு விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 குறைந்து, ரூ.4,181-க்கு விற்பனை ஆகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4181 விற்பனை செய்யப்படுகின்றது. நேற்றைய விலை 4217 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

    அதேபோல இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 69.80 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 69,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளி 70,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் படிக்க... Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் 6-வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை..

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்களில் இருந்து தொடர்ந்து குறைந்து கொண்டே உள்ளது. இந்நிலையில் இன்றும் தங்கத்தில் விலை குறைந்து சவரன் விலை 34,000 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: