முகப்பு /செய்தி /வணிகம் / Gold Rate: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை.. இன்றைய (ஜூன் 7, 2022) நிலவரம்

Gold Rate: அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை.. இன்றைய (ஜூன் 7, 2022) நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Gold Rate : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் அதிரடியாகக் குறைந்துள்ளது.

  • Last Updated :

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

ஜூன் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளான ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிரடியாகக் குறைந்து சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் குறைந்து 4,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Must Read : வரதட்சணை கேட்டு காதல் கணவன் கொடுமை - இரண்டே மாதத்தில் கசந்த 7 ஆண்டு காதல்.. இளம்பெண் தற்கொலை

இந்நிலையில், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி வெள்ளி கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

First published:

Tags: Gold, Gold Price, Gold rate