Home /News /business /

Gold Rate: வாரத்தின் முதல் நாளே ஏறுமுகத்தில் தங்கம் விலை..! - இன்றைய (மே 30, 2022) நிலவரம்

Gold Rate: வாரத்தின் முதல் நாளே ஏறுமுகத்தில் தங்கம் விலை..! - இன்றைய (மே 30, 2022) நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Gold Rate Today : நேற்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்த நிலையில், இன்று (மே 30, 2022) சற்று அதிகரித்துள்ளது.

    தங்கம் விலை நேற்று சவரனுக்கு 38,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 4,785 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 38,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை பாண்டிச்சேரியில் 4,780 ரூபாயாகவும், மும்பையில் 4,775 ரூபாயாகவும், பெங்களூருவில் 4,775 ரூபாயாகவும், ஹைதராபாத்தில் 4,775 ரூபாயாகவும், கேரளாவில் 4,777 ரூபாயாகவும், டெல்லியில் 4,775 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 4,775 ரூபாயாகவும் உள்ளது.

    இந்நிலையில், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் இன்று, ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றம் இன்றி நேற்று விற்பனை செய்யப்பட்ட (ரூ.67) அதே விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளி 67,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை, எண்ணெய் விலை, மளிகை பொருட்களின் விலை என அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், தங்கத்தின் விலையும் அதிகரிப்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

    Must Read : 600 தட்டுகளில் லாரியில் வந்த சீர்வரிசை.. கெத்து காட்டிய அத்தைகள் - பிரம்மாண்டமாக நடந்த மஞ்சள் நீராட்டு விழா!

    அத்துடன், வாரத்தின் முதல் நாளே விலை அதிகரித்துள்ளதால் நகை வாங்குவோர் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி