தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் விற்பனை அதிக அளவில் இருந்து வருகிறது. தங்கம் விலையானது இந்த வாரத்தில் விலை ஏற்றத்துடனே தொடங்கிய நிலையில் மறுநாள் சற்று குறைந்து விற்பனையானது. பின்னர் அதிரடியாகக் குறைந்து இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. கடந்த 18ஆம் தேதி தங்கம் விலை கிராம் ரூ.4,739க்கும், சவரன் ரூ.37,912க்கும் விற்கப்பட்டது. 19ஆம் தேதி தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதாவது கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,755க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,040க்கும் விற்கப்பட்டது.
தொடர்ந்து 20ஆம் தேதியும் தங்கம் விலை அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,793க்கும், சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,344க்கும் விற்கப்பட்டது. இவ்வாறு தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், நேற்று சவரனுக்கு 320 ரூபாய் அதிரடியாகக் குறைந்து ஒரு சவரன் ரூ.38,120-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை கணிசமாக குறைந்த நிலையில், இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது.
அந்த வகையில் இன்று சற்று அதிகரித்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 4,775 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து, 38,200 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Must Read : குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களுக்கான தடை மேலும் ஓர் ஆண்டு நீட்டிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
இதேபோல, சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.66.60-க்கு விற்பனையாகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.