தமிழ்நாட்டில்
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் விற்பனை அதிக அளவில் இருந்து வருகிறது. தங்கம் விலையானது இந்த வாரத்தின் தொடக்கம் முதலே விலை ஏற்றத்துடனே தொடங்கிய நிலையில் மறுநாள் சற்று குறைந்து விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் ஏறுமுகத்தில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது பொது மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. இதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. 1 கிலோ வெள்ளி 61,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், அமெரிக்காவின் பத்திர சந்தை மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க காரணமாக அமைந்துள்ளது. தங்கத்தின் விலையானது 1,870 டாலராக உள்ளது.
Must Read : பிரதமர் வருவதும் திட்டங்களை தொடங்கி வைப்பதும் நல்லது தான் ஆனால்.. இடித்துரைக்கும் கே.பாலகிருஷ்ணன்
இந்த விலையானது மேலும் அதிகரித்து 1,890 டாலர்களை தொடலாம் என சர்வதேச நிபுணர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.