Home /News /business /

Gold Rate : உக்ரைன் போரால் உச்சம் தொட்ட தங்கம் விலை.. பேரதிர்ச்சியில் மக்கள்

Gold Rate : உக்ரைன் போரால் உச்சம் தொட்ட தங்கம் விலை.. பேரதிர்ச்சியில் மக்கள்

தங்க விலை

தங்க விலை

Gold Rate today : 4 கேரட் தங்கத்தின் விலை : 1 கிராம் ரூ 4,952 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தின் விலை அநியாயத்துக்கு உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை பயணித்து வருவதால் மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு, 1,856 ரூபாய் உயர்ந்தது. 1 சவரன் 39 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனையானது. இது உச்சமாக பார்க்கப்படுகிறது. 

    உக்ரைன் எல்லையில் தன் படைகளை ரஷ்யா நிறுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் மொத்த உலகமும் இப்போது இதுக் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
    இது, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச சந்தைக்கு ஏற்ப நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை மாற்ற அடைந்துள்ளது.

    இதையும் படிங்க..Russia-Ukraine: ரஷ்யா குறித்து இந்தியாவுடன் ஆலோசிக்கிறோம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம், 4,719 ரூபாய்க்கும்; சவரன், 37 ஆயிரத்து, 752 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஒரு கிராம் வெள்ளி, 68.70 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக நேற்றைய தினம்  சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்தது.நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு, 232 ரூபாய் அதிகரித்து, 24 கேரட் தங்கம், 4,951 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரே நாளில் தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டது விற்பனையாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அதே போல் உக்ரைன் போரால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இன்று (25 பிப்ரவரி 2022) தங்கத்தின் விலை முழு விபரம்:

    அதிகாலை நிலவரப்படி 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் : 1 கிராம் ரூ 4,952 க்கு விற்பனை செய்யப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி