ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold rate: தங்கம் விலை குறைந்தது... சவரன் எவ்வளவுக்கு விற்பனை?

Gold rate: தங்கம் விலை குறைந்தது... சவரன் எவ்வளவுக்கு விற்பனை?

மாதிரி படம்

மாதிரி படம்

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.400 வரை அதிகரித்துள்ளது. தங்கம் விலை குறைந்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று அதிகரித்துள்ளது.

    தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4775க்கும்  ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 38,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று விலை குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,758க்கும் ஒரு சவரன் ரூ.38,064க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல், வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.66.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,300க்கும் விற்அனை செய்யப்பட்டது. இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.66.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Published by:Murugesh M
    First published:

    Tags: Gold, Gold Price, Silver