Gold Rate | குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

தங்க நகைகள்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரன் 8 ரூபாய் குறைந்து 38,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த கவலை நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த பல நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்பட்டது.

    இந்தநிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.4759 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.38072க்கு விற்பனையாகிறது.

    ஆனால் இன்று வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 66 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 900 ரூபாய் உயர்ந்து 66,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் தங்கத்தின் இந்த ஏற்ற இறக்கத்திற்கு பங்குச்சந்தைகளில் நிலவும் நிலையற்றதன்மை காரணமாகவும் இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



    இந்த வாரம், வாரத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை குறைந்து உள்ளதால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vaijayanthi S
    First published: