தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது... ஒரு சவரன் ₹27,064

Web Desk | news18-tamil
Updated: August 2, 2019, 11:03 PM IST
தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது...  ஒரு சவரன் ₹27,064
தங்கம் விலை நிலவரம்
Web Desk | news18-tamil
Updated: August 2, 2019, 11:03 PM IST
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தில் விலை 27 ஆயிரம் ரூபாயை தாண்டி, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்க வேண்டி காத்திருந்தவர்கள் கவலையடைந்துள்ளனர்.

தங்கத்திற்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 73 ரூபாய் அதிகரித்து, 3,383 ரூபாய்க்கு விற்பனையானது.


இதன் மூலம் ஒரு சவரனுக்கு 584 ரூபாய் அதிகரித்து, 27064 ரூபாய்க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதனிடையே, ஒரு கிராம் வெள்ளி விலை 60 காசுகள் உயர்ந்து, ₹44.30 ஆனது.

அந்த வகையில், ஒரு கிலோ வெள்ளி விலை, 600 ரூபாய் அதிகரித்து, 44300 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

Loading...

First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...