Home /News /business /

Gold Rate : அதிரடியாகக் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய (ஜூன் 29, 2022) நிலவரம்

Gold Rate : அதிரடியாகக் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய (ஜூன் 29, 2022) நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Gold Rate Today : தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 29) தங்கம் விலை குறைந்துள்ளது.

    தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளே தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பின்னர், ஜூன் 14ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

    சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, சவரன் 38,120 ரூபாய்க்கு விற்பனை செய்ப்பட்து. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் 4,765 ரூபாய்க்கு விற்பனையானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு 256 ரூபாய் அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் 37,000 ரூபாய்க்கு கீழ் குறைந்து, 37,864 ரூபாய்குக் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4,733 ஆக உள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

    Must Read : சுடுகாட்டில் மர்ம குழி.. மகள் வாங்கிய கடனுக்காக கொல்லப்பட்ட பெண் - கள்ளக்குறிச்சியை அதிர வைத்த சம்பவம்

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.65,300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 65.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் 66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி