Home /News /business /

Gold Rate : குறைந்தது தங்கம் விலை... இன்றைய (ஜூன் 28, 2022) விலை நிலவரம்

Gold Rate : குறைந்தது தங்கம் விலை... இன்றைய (ஜூன் 28, 2022) விலை நிலவரம்

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate Today : தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று (ஜூன் 28) தங்கம் விலை குறைந்துள்ளது.

    தங்கம் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளே தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பின்னர், ஜூன் 14ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, சவரன் 38,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் 4,765 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    Must Read : கல்லூரிகால நினைவுகளோடு அமைச்சர்களின் கல கல பேச்சு.. திருச்சி கல்லூரியில் சிரிப்பலை

    இன்று, வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் 66 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price

    அடுத்த செய்தி