• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Gold Rate | தொடர்ந்து சரிந்து வரும் ஆபரணத்தங்கம் விலை..

Gold Rate | தொடர்ந்து சரிந்து வரும் ஆபரணத்தங்கம் விலை..

கோப்புப் படம்

கோப்புப் படம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் 43,000 ரூபாய் வரை விற்ற சவரன் தங்கம், 6 மாதங்களில் சுமார் 8 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.

  • Share this:
    கடந்தாண்டு இதேநாளில் ஒரு கிராம் தங்கம் 3856 ரூபாயாக இருந்தது. ஊரடங்கு அமலாவதற்கு முன் தினமான மார்ச் 24ல் ஒரு கிராம் தங்கம் 4,352 ரூபாயாக உயர்ந்தது. ஜூலை 9ம் தேதி மேலும் விலை உயர்ந்த தங்கம் 4,718 ரூபாயாக அதிகரித்தது. 2020 ஆகஸ்ட்7ல் புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் 5420 ரூபாயாக அதிகரித்தது. ஆகஸ்ட் 24ம் தேதி 5,000 ரூபாய்க்கு கீழ் சென்ற தங்கம் 4,993 ரூபாயாக சரிந்தது நவம்பர் 16ல் 4821 ரூபாயாக குறைந்தது

    கடந்த ஜனவரி 6ம் தேதி 4,885 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் , ஜனவரி 11ல் 4662 ரூபாயாக சரிந்தது. கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட்டில் ,தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12.5 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக குறைக்கப்பட்டது.

    மேலும் படிக்க... Petrol-Diesel Price | உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

    பிப்ரவரி 4ம் தேதி ஒரு கிராம் 4,483 ரூபாயாகவும், ஒரு சவரன் 35,864 ரூபாயாக உள்ளது. பட்ஜெட்டுக்கு பிறகு ஒரு சவரன் தங்கம்  1136 ரூபாய் குறைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 336 ரூபாய் குறைந்து 35,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 42 ரூபாய் குறைந்து 4,441 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதே போல வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு குறைந்து 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: