Home /News /business /

Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிரடியாக உயர்ந்தது.. இன்றைய (ஜூலை 1, 2022) நிலவரம்

Gold Rate : தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிரடியாக உயர்ந்தது.. இன்றைய (ஜூலை 1, 2022) நிலவரம்

தங்கம் விலை

தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று (ஜூலை 1) தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது.

    தங்கம் விலை கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளே தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பின்னர், ஜூன் 14ஆம் தேதி சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. நேற்று ஆபரண தங்கத்தின் விலையில் சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 37,864 ரூபாய்குக் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்படி, மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம், 38,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருகிராம் 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Must Read : ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன காதணி கண்டுபிடிப்பு..!

    வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு 100ரூபாய் குறைந்து, கிலோ 65,000 ரூபாய்க்கு விறப்னை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    இந்நிலையில், 7.5 சதவீதமாக இருந்த தங்கத்தின் இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி