Home /News /business /

Gold Rate : தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரன் ரூ.39,000 தாண்டியது - இன்றைய (ஆகஸ்டு 9, 2022) நிலவரம்

Gold Rate : தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரன் ரூ.39,000 தாண்டியது - இன்றைய (ஆகஸ்டு 9, 2022) நிலவரம்

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate Today : தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து 39,000 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    இந்திய மக்களிடம் தங்கத்தின் மீதான மோகம் அதிகமாக உள்ள நிலையில், கடந்த வாரத்தில் தங்கம் விலை ஏற்றத்தில் இருந்து வந்தது. நேற்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.38,800க்கு விற்பனை செய்யப்படது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ. 240 மீண்டும் அதிரடியாக உயர்ந்து 39,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூ4,880-க்கு விற்பனையாகிறது.

    Must Read : பள்ளி மாணவியை கடத்த முயன்ற மர்மநபர்கள்.. அதிர்ச்சியில் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி..! - பட்டப்பகலில் துணிகரம்

    அதேபோல, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.64.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 64,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி