Home /News /business /

Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை - இன்றைய (ஜூன் 20, 2022) நிலவரம்

Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை - இன்றைய (ஜூன் 20, 2022) நிலவரம்

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate Today : கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று (ஜூன் 20) உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாரத்தின் தொடக்க நாளான இன்று (ஜூன் 20) தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை  இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜூன் 1ஆம் தேதி சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளே தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,775 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,765 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 38,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் உயர்ந்து 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Must Read : பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு; தமிழில் ஒருவர் மட்டுமே சதம்

    வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று 66.30 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 66,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி