Home /News /business /

Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய (ஜூன் 17, 2022) நிலவரம்

Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்றைய (ஜூன் 17, 2022) நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Gold Rate Today : தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்றும் உயர்ந்து சென்னையில் சவரன் 38ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சென்னையில் உயர்ந்துள்ளது. தங்கம் விலை  இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜூன் 1ஆம் தேதி சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளே தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், கடந்த புதன் கிழமை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, சவரன் 37,720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 4,755 ரூபாய்க்கு விற்பனையானது. அதன்படி, சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Must Read : மரத்தடியே வகுப்பறை; மரக்கிளையே மேற்கூரை... நாகப்பட்டினத்தில் உள்ள விச்சூர் அரசுப்பள்ளி அவலம்

    சென்னையில் இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு (8 கிராம்) 160 ரூபாய் உயர்ந்து 38,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி