Home /News /business /

Gold Rate: தங்கம் விலை உயர்வு... மீண்டும் சவரன் 38,000-ஐ கடந்தது - இன்றைய (ஜூன் 16, 2022) நிலவரம்

Gold Rate: தங்கம் விலை உயர்வு... மீண்டும் சவரன் 38,000-ஐ கடந்தது - இன்றைய (ஜூன் 16, 2022) நிலவரம்

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate: Today : கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்த நிலையில், தங்கம் விலை இன்றும் மீண்டும் அதிகரித்து சென்னையில் சவரன் 38ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.

    ஜூன் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளான ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, செவ்வாய் கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், நேற்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனையானது. அதன்படி சென்னையில், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,715க்கும், சவரன் 37,720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    Must Read : 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20-ம் தேதி வெளியீடு

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 4755 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.38,040-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.66.00க்கு விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று 66,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி