Gold Rate | ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரிப்பு..

Gold Rate | ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 56 ரூபாய் அதிகரிப்பு..

கோப்புப் படம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் 56 ரூபாய் உயர்ந்துள்ளது.

  • Share this:
    தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

    பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் 56 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 37,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 7 ரூபாய் அதிகரித்து 4,695 ரூபாயாக உள்ளது.

    மேலும் படிக்க...வேலூரில் போலி பெட்ரோல், டீசல் விற்பனை அமோகம்.. அரசுக்கு நஷ்டம்..

    அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 70 ரூபாய் 60 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி ஒரு கிலோ 1000 ரூபாய் அதிகரித்து 70, 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: