Gold Rate | இன்று உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | இன்று உயர்ந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

கோப்புப் படம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து மீண்டும் 37 ஆயிரத்தை எட்டியுள்ளது.

  • Share this:
    தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்தநிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து மீண்டும் 37,000ஐ எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் 37,032 ரூபாயாக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை 18 ரூபாய் அதிகரித்து 4,629 ரூபாயாக உள்ளது.

    மேலும் படிக்க...சென்னை அருகே பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழப்பு....

    அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து 67 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி கிலோ 600 ரூபாய் விலை உயர்ந்து 67,300 ரூபாயாக விற்கப்படுகிறது. வரும் நாட்களில் கிறிஸ்துமஸ்,  புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை என தொடர்ச்சியாக வருகிறது. இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: