புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..!

புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..!
கோப்புப் படம்
  • Share this:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன்ரூ. 31 ஆயிரத்து 840 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சென்னையில் கடந்த 10 நாட்களாக ஏற்றமும், இறக்கமும் ஆக இருந்து வந்த தங்கம் விலை, நேற்று ஒரே நாளில் 312 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 720 க்கு விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 980 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 31 ஆயிரத்து 840 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


அத்துடன், வெள்ளி விலையும் கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்