ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய (ஜூன் 9, 2022) நிலவரம்

Gold Rate : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய (ஜூன் 9, 2022) நிலவரம்

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate Today: கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஜூன் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளான ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

  இந்நிலையில், நேற்று முன்தினம் (7ஆம் தேதி) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிரடியாகக் குறைந்து சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து சவரன் ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில், இன்று அதிரடியாகக் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,795 ஆக உயர்ந்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் உயர்ந்து 38,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

  Must Reade : நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஒரு லட்சம் ஆதரவற்றவர்களுக்கு விருந்து!

  இதனால், இன்று தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Gold Price, Gold rate