கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை... சவரன் ₹28,656 -க்கு விற்பனை

Web Desk | news18-tamil
Updated: August 10, 2019, 10:14 PM IST
கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை... சவரன் ₹28,656 -க்கு விற்பனை
ஆபரணத்தங்கத்தின் விலை
Web Desk | news18-tamil
Updated: August 10, 2019, 10:14 PM IST
கடந்த 10 நாட்களில் ரூ. 2,000 வரை உயர்ந்த தங்கத்தின் விலை, இன்றும் சவரனுக்கு ரூ. 104 உயர்ந்து,  ரூ. 28,656 -க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 13 உயர்ந்து, ரூ. 3,582-க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் ஒரு சவரனுக்கு ரூ. 104 அதிகரித்து ரூ. 28,656-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒருபக்கம் அதிகரிக்க, வெள்ளியின் விலை குறைந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசு குறைந்து,                                        ரூ. 47.30-க்கு விற்பனையாகிறது.  ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 200 சரிந்து, ரூ.47,300-ஆக உள்ளது.

இந்தநிலையில், கடந்த 10 நாட்களில் மட்டும், ஒரு சவரன் தங்கத்தின் விலை,  ரூ. 2 ,176 அதிகரித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை  ஏற்றம் கண்டு வருகிறது. சவரனுக்கு ரூ. 29,000 நெருங்குவதால், நகைகள் வாங்குவோர் கவலையடைந்துள்ளனர்.

Loading...

Also watch: தங்கத்தின் கதை தெரியுமா?

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...