இன்று அட்சய திருதியை : கடந்த 4 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 58 சதவீதம் உயர்வு..!

Akshaya Tritiya 2020 | பொதுவாக, நாடு முழுவதும் அட்சய திருதியை அன்று, 20 முதல் 25 டன் தங்கம் விற்பனை செய்யப்படும்.

இன்று அட்சய திருதியை : கடந்த 4 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 58 சதவீதம் உயர்வு..!
தங்கம்
  • Share this:
 தங்கத்தை ஆன்லைனில் சிலர் முன்பதிவு செய்தாலும், தங்கத்தின் விலையால் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை பன்மடங்கு சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையின் காரணமாக அன்றைய தினம் ஒரு கிராம் தங்க நகையாவது வாங்கிவிட வேண்டும் என்று பெரும்பாலானோர் நினைப்பது உண்டு. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டு இருப்பதால், நகைகளை ஆன்லைன் மூலம் கடை உரிமையாளர்கள் விற்கத் தொடங்கி உள்ளனர்.

பொதுவாக, நாடு முழுவதும் அட்சய திருதியை அன்று, 20 முதல் 25 டன் தங்கம் விற்பனை செய்யப்படும். இது இந்தியாவில்,ஓராண்டில் விற்பனை ஆகும் தங்கத்தில் 4 சதவிதம் மட்டுமே. கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையற்ற தன்மையால், தங்கத்தின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.


இதனால் விற்பனை குறையும் என கூறப்படுகிறது. உதாரணமாக,  2016ம் ஆண்டு அட்சய திருதியை அன்று, ஒரு கிராம் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 843 ரூபாயாக இருந்தது. இது 2017ம் ஆண்டு அட்சய திருதியை அன்று 2 ஆயிரத்து 777 ரூபாயாகவும், 2018ம் ஆண்டில் 2 ஆயிரத்து 992 ரூபாயாகவும் இருந்தது. தொடர்ந்து அதிகரித்த தங்கத்தின் விலை 2019ம் ஆண்டு அட்சய திருதியை அன்று 3 ஆயிரத்து 22 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 4 ஆயிரத்து 509 ரூபாயாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சுமார் 58 சதவிதம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டு அட்சய திருதியை அன்று நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும் நிலையில், இந்த ஆண்டு இணையம் மூலம் செய்யப்படும் விற்பனை என்பதால், கிராமபுறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் விற்பனை பன்மடங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published: April 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading