கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
ஜூன் 1ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மறுநாளான ஜூன் 2ஆம் தேதி தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனையாகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்படி சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாயக்கு விற்பனையாகிறது. இதனால், இன்று தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Must Read : காவல்துறையினர் மோதியதில் எலும்பு முறிவு: ப.சிதம்பரம் தகவல்
இந்நிலையில், ஒரு கிலோ வெள்ளி 1300 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி 66 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.