Home /News /business /

Gold Rate : சவரனுக்கு ரூ.544 அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய (ஜூலை 7, 2022) நிலவரம்

Gold Rate : சவரனுக்கு ரூ.544 அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய (ஜூலை 7, 2022) நிலவரம்

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate Today : தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.520 அதிரடியாகக் குறைந்த நிலையில், இன்றும் குறைந்துள்ளது.

    இந்தியாவில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிகரான அளவில் கடந்த ஜூன் மாதத்திலும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதத்தில் 600 கோடி டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாதத்தின் (ஜூலை) முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 அதிரடியாக அதிகரித்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம், 38,280 ரூபாய்க்கு விற்பனையானது. ஒருகிராம் 4,785 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து விலை அதிகரித்து வந்தது.

    கடந்த திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் உயர்ந்து ரூ.4,810க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு144 ரூபாய் உயர்ந்து 38,480 ரூபாய்க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து விற்பனையானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு 520 ரூபாய் அதிரடியாகக் குறைந்தது. அதன்படி, ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 38 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் சரிவடைந்து 3,7920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் 65 ரூபாய் குறைந்து ரூ. 4,740க்கு விற்பனையானது.

    Must Read : குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி? - திருமங்கலம் அருகே இரும்புத்துண்டில் மோதியதால் பரபரப்பு..

    அதனைத் தொடர்ந்து, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.544 குறைந்து, சவரன் 37,376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    ஒரு கிராம் தங்கம் 4,672 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி