Home /News /business /

Gold Rate : தங்கம் விலை குறைந்தது... இன்றைய (ஆகஸ்டு 6, 2022) நிலவரம்

Gold Rate : தங்கம் விலை குறைந்தது... இன்றைய (ஆகஸ்டு 6, 2022) நிலவரம்

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate Today : சென்னையில் தங்கம் விலை இன்று (ஆகஸ்டு 6, 2022) கிராம் ஒன்றுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்துள்ளது.

    தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    இந்திய மக்களிடம் தங்கத்தின் மீதான மோகம் அதிகமாக உள்ள நிலையில், இந்த வாரத் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை ஏற்றத்தில் இருந்து வந்தது. நேற்று விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் இன்று, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ரூ.4,845க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு 160 ரூபாய் சரிந்து ரூ.38,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Must Read : களத்தில் உயிர்விட்ட கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்துக்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ.10 லட்சம் நிதி உதவி

    அதேபோல, வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 பைசா குறைந்து 63.00 ரூபாயாகவும், கிலோவுக்கு ரூ.600 சரிந்து, 63,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி